'பராரி' படத்தின் 'சாம்பவா' பாடல் வெளியீடு

எழில் பெரியவேடி இயக்கியுள்ள ‘பராரி’ படத்தின் 'சாம்பவா' என்ற வீடியோ பாடல் வெளியாகி உள்ளது.;

Update:2024-11-19 20:26 IST
பராரி படத்தின் சாம்பவா பாடல் வெளியீடு

சென்னை,

ஹரிஷங்கர், சங்கீதா கல்யாண் நடிப்பில் எழில் பெரியவேடி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'பராரி' . 'குக்கூ', 'ஜோக்கர்', 'ஜிப்ஸி', 'ஜப்பான்' போன்ற பல படங்களை இயக்கிய இயக்குனர் ராஜு முருகன், எஸ்பி சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை வழங்குகிறார். இப்படத்தின் இயக்குனர் எழில் பெரியவேடி ராஜு முருகனின் உதவி இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்கு ஷேன் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தை காலா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் நடிகர் ஹரி சங்கர் தயாரித்திருக்கிறார். சமீபத்தில், 'பராரி' திரைப்படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசரில் ஆதிக்க சாதி - ஒடுக்கப்பட்ட மக்கள் ஆகியோரின் வாழ்வியலின் உணர்வுபூர்வமான காட்சிகள் இடம்பெற்றிருந்ததால் பார்வையாளர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றது.

இப்படம் வருகிற 22-ந் தேதி திரையரங்குளில் வெளியாக உள்ளது. இந்தநிலையில், தற்போது இப்படத்தின் 3-வது பாடலான 'சாம்பவா' என்ற வீடியோ பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலுக்கான வரிகளை உமா தேவி எழுதியுள்ளார். மீனாட்சி இளையராஜா இப்பாடலை பாடியுள்ளார். 

Full View
Tags:    

மேலும் செய்திகள்