துபாயிலிருந்து அஜித் வெளியிட்ட வீடியோ
அஜித் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.;
துபாய்,
இன்று நடைபெறவிருக்கும் ரேஸில் அஜித்குமார் பங்கேற்பார் என கூறப்பட்ட நிலையில், துபாய் கார் ரேஸில் அஜித்குமார் ஓட்டுநராக பங்கேற்பதில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்திருப்பதாக அணிக்குழு அறிவித்துள்ளது.குறிப்பிட்ட சில ரேஸில் மட்டுமே அஜித்குமார் பங்கேற்கபோவதாகவும், சில போட்டிகளில் இருந்து விலகுவதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது
பயிற்சியின்போது ஏற்பட்ட விபத்தில் சிக்கியதால் அஜித்தின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது.
துபாய் கார் ரேஸில் 20 அணிகள் பங்குபெற்ற தகுதிசுற்றில் நடிகர் அஜித்குமாரின் அணி 7வது இடம் பிடித்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், துபாயிலிருந்து அஜித் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
'நிறைய பேன்ஸ் துபாய் வந்துள்ளார்கள். நீங்க எல்லாரும் சத்தோசமா, ஆரோக்கியமா, மன நிம்மதியோடு வாழ கடவுளை வேண்டி கொள்கிறேன். உங்க குடும்பத்தை பாருங்கள். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கவில்லை என சோர்ந்து விடக் கூடாது கடினமாக உழைக்க வேண்டும். முயற்சியை ஒருபோதும் விடக் கூடாது. நேரத்தை வீணடிக்கக் கூடாது. பேன்ஸ் சண்டை போடாதீங்க' என ரசிகர்களுக்கு அன்பாக அட்வைஸ் செய்துள்ளார் அஜித்.