காமராஜர் இலவசமாய் வழங்கியவை வேட்டி சேலைகள் அல்ல பதவிகள் - வைரமுத்து புகழாரம்
காமராஜர் இலவசமாய் வழங்கியவை வேட்டி சேலைகள் அல்ல பதவிகள் என்று கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டியுள்ளார்.;
சென்னை,
பெருந்தலைவர் காமராஜரின் 122-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு கவிஞர் வைரமுத்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
துறவிபோல் ஒரு வாழ்வு, பொதுநலம் துறவாத தொண்டு. கஜானா தன்வசம், கரன்சி தொடாத கரம். இலவசமாய் வழங்கியவை வேட்டி சேலைகள் அல்ல, பதவிகள். கட்டாந்தரையில் கல்விப் பயிர் வளர்த்த நல்லேர் உழவன்.
எல்லா மழையும் பூமிக்கே. சிறுதுளி நீரையும் சேமிப்பதில்லை வானம்; காமராஜர் வானம். தோழர்களே! காமராஜர் ஆட்சி அமைப்போம் - நல்ல முழக்கம்தான்; காமராஜர் ஆவோம் என்பது அதனினும் நல்ல திட்டம் அல்லவா? இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.