27 வருடங்களுக்கு பிறகு கஜோலுடன் இணையும் பிரபுதேவா

நடிகர் பிரபுதேவா மற்றும் நடிகை கஜோல் இருவரும் புதிய படம் ஒன்றில் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர்.;

Update: 2024-05-25 08:14 GMT

மும்பை,

நடிகர் பிரபுதேவா மற்றும் நடிகை கஜோல் இருவரும் புதிய படம் ஒன்றில் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். இதற்கு முன்பு கஜோலும், பிரபுதேவாவும், ராஜீவ் மேனன் இயக்கத்தில் 1997-ம் ஆண்டு வெளியான 'மின்சார கனவு' படத்தில் இணைந்து நடித்தனர். தற்போது 27 வருடங்களுக்குப் பிறகு ஒன்றாக நடிக்கின்றனர்.

பாலிவுட்டில் உருவாகும் இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சரண் தேஜ் இயக்குகிறார். இது இவர் இயக்கும் முதல்  பாலிவுட் படம் ஆகும். இப்படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இசையமைக்கிறார். அதிரடி திரில்லர் பாணியில் உருவாகும் இந்த படத்தில் ஜிஷு சென்குப்தா, நசிருதீன் ஷா, சம்யுக்தா மேனன், மற்றும் ஆதித்யா ஷீல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படத்தின் டீசரை விரைவில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர். 27 வருடங்களுக்கு பிறகு இருவரும் இணைவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்