'நலமான தீபாவளி' - சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த 'கங்குவா' படக்குழு

சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ‘கங்குவா’ படக்குழு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளது.;

Update: 2024-10-31 06:41 GMT

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் சிவா இயக்கத்தில் ஸ்டுடியோ கிரின் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா இந்தப் படத்தை மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளார். இந்தப் படம் வரலாற்று கதைக்களத்தில் உருவாகி உள்ளது.

இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை திஷா பதானி நடித்துள்ளார். மேலும் பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். நடிகர் சூர்யா இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதற்கிடையில் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகள் டெல்லி, மும்பை, ஐதராபாத் போன்ற பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது. அதைத்தொடர்ந்து பிரமாண்ட இசை வெளியீட்டு விழாவும் சமீபத்தில் நடந்து முடிந்தது.

இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும்நிலையில், இப்படத்தின் படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. அதில் 'நலமான தீபாவளி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படம் வருகிற 14-ம் தேதி சர்வதேச அளவில் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்