ஸ்ட்ரீ 3, முஞ்யா 2 அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்

தினேஷ் விஜயன் தனது மோடாக் பிலிம்ஸின் கீழ் பல காமெடி ஹாரர் படங்களை தயாரித்து வருகிறார்.;

Update: 2025-01-03 00:48 GMT

சென்னை,

பிரபல தயாரிப்பாளர் தினேஷ் விஜயன் தனது மோடாக் பிலிம்ஸின் கீழ் பல காமெடி ஹாரர் படங்களை தயாரித்து வருகிறார். அதன்படி, இந்த ஆண்டு வெளியான ஸ்ட்ரீ 2, முஞ்யா உள்ளிட்ட படங்களை தயாரித்திருந்தார். அடுத்ததாக ராஷ்மிகா மந்தனா, ஆயுஷ்மான் குரானா நடிக்கும் தாமா படத்தை தயாரிக்கிறார்.

மேலும், சக்தி ஷாலினி, சாமுண்டா, பேடியா 2, பேக்லா மஹாயுத் மற்றும் தூசாரா மஹாயுத் ஆகிய படங்களையும் தயாரிக்கிறார். இந்நிலையில், இந்த படங்களின் ரிலீஸ் தேதி குறித்து தயாரிப்பாளர் தினேஷ் விஜயன் அப்டேட் கொடுத்துள்ளார்.

அதன்படி, ராஷ்மிகா நடிக்கும் தாமா மற்றும் சக்தி ஷாலினி மட்டும் இந்தாண்டு வெளியாக உள்ளது. மேலும், வருண் தவான் நடிக்கும் பேடியா 2 அடுத்தாண்டு ஆகஸ்ட் 14-ம் தேதியும் சாமுண்டா டிசம்பர் 4-ம் தேதியும் வெளியாகும் என்று கூறியுள்ளார்.

அடுத்தபடியாக ஸ்ட்ரீ 3, 2027-ம் ஆண்டு ஆகஸ்ட் 13-ம் தேதியும் முஞ்யா 2 டிசம்பர் 24-ம் தேதியும் வெளியாக உள்ளது. இந்த காமெடி ஹாரர் யுனியர்ஸின் கடைசி இரு படங்களாக அதாவது மார்வெலின் இன்பினிட்டி வார் மற்றும் எண்ட் கேம் போல பேக்லா மஹாயுத் மற்றும் தூசாரா மகாயுத் இருக்கும் என்று கூறியுள்ளார். இப்படங்கள் 2028-ம் ஆண்டு முறையே ஆகஸ்ட் 11 மற்றும் அக்டோபர் 18-ம் தேதி வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்