2025 'சர்கார்' ஆண்டு - நடிகர் நானி

'ஹிட் 3' படம் வருகிற மே மாதம் 1-ம் தேதி திரைக்கு வருகிறது.;

Update: 2025-01-05 03:25 GMT

சென்னை,

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. சமீபத்தில், இவர் நடிப்பில் வெளியான படம் 'சூர்யாவின் சனிக்கிழமை'. பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்திருந்த இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து நானி, 'கோர்ட்' மற்றும் 'ஹிட் 3' ஆகிய 2 படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதில் ஹிட் 3 படத்தை பிரபல இயக்குனர் சைலேஷ் கொலானு இயக்குகிறார். பிரசாந்தி திபிர்னேனி தயாரிப்பில் உருவாகும் இப்படம் வருகிற மே மாதம் 1-ம் தேதி திரைக்கு வருகிறது.

கிரைம் திரில்லர் ஜானரில் தயாராகி வரும் 'ஹிட் 3' படத்தின் படப்பிடிப்பு தற்போது ஜம்மு காஷ்மீரில் நடந்து வருகிறது. இந்நிலையில், நடிகர் நானி புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் இருக்கும் அந்த போஸ்டரில் 2025 'சர்கார்'ஆண்டு என்று பதிவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்படத்தில் நானி கதாபாத்திரத்தின் பெயர் சர்காராக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்