'நேசிப்பாயா' படத்தின் தணிக்கைச் சான்றிதழ் வெளியீடு!
‘நேசிப்பாயா’ படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 14-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.;
சென்னை,
'குறும்பு, அறிந்தும் அறியாமலும், பட்டியல்' ஆகிய படங்களை இயக்கியவர் விஷ்ணுவர்தன். இவர் இயக்கத்தில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான 'பில்லா' இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இப்படம் அமைந்தது.பின்னர் 2021-ம் ஆண்டு ஷெர்ஷா எனும் இந்தி திரைப்படத்தை கரன் ஜோஹர் தயாரிப்பில் இயக்கினார். இந்தநிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் விஷ்ணுவர்தன் தமிழில் படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்திற்கு 'நேசிப்பாயா' என்று பெரியடப்பட்டுள்ளது.இப்படத்தில் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை 'மாஸ்டர்' படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் சரத்குமார், குஷ்பூ, பிரபு, ராஜா மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.
ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாக்கி இப்படத்தின் டீசர், பாடல்கள், டிரெய்லர் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
இந்நிலையில் 'நேசிப்பாயா' படத்திற்கு தணிக்கைக்குழு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. இத்திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 14-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.