'கேம் சேஞ்சர்': இந்த காரணத்திற்காக ராம் சரண் மற்றும் ஷங்கர் தங்கள் சம்பளத்தை குறைத்தார்களா?

ராம் சரண், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் நடித்து இருக்கிறார்.;

Update: 2025-01-03 01:55 GMT

ஐதராபாத்,

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ஊழல் அமைப்புக்கு எதிராக போராடி நீதியை நிலைநாட்டும் ஐஏஎஸ் அதிகாரியாக ராம் சரண் நடித்துள்ளார்.

அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் ராம் சரண் நடித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படம் பொங்கல் வெளியீடாக வரும் 10-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டது உள்ளிட்ட காரணங்களால் நடிகர் ராம் சரண் மற்றும் இயக்குனர் ஷங்கர் தங்கள் சம்பளத்தை குறைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, ராம் சரண் இப்படத்திற்காக ரூ. 65 கோடி வரை தனது சம்பளத்தை குறைத்ததாகவும் ஷங்கர் ரூ.25 கோடி குறைத்து ரூ.35 கோடி சம்பளம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. இது வெறும் தகவல் மட்டுமே, இது குறித்த அதிகாரப்பூரவ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்