தமிழ்நாட்டில் போதை கலாசாரம் அதிகரித்து விட்டது - நடிகர் சரத்குமார்

சென்னை விமான நிலையம் வந்த சரத்குமாரிடம், தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்திருப்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.;

Update: 2025-01-03 03:24 GMT

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் சரத்குமார். கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான 'பொன்னியின் செல்வன், போர் தொழில், பரம் பொருள்' ஆகிய திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தன.

தற்போது தனது 150-வது படத்தில் போலீஸ் அதிகாரியாக சரத்குமார் நடித்துள்ளார். 'தி ஸ்மைல் மேன்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் கடந்த மாதம் 27-ம் தேதி வெளியானது. இந்த படத்தில் சரத்குமாருடன் சிஜா ரோஸ், இனியா, ஜார்ஜ் மர்யான் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், சென்னை விமான நிலையம் வந்த சரத்குமாரிடம், தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்திருப்பது குறித்து கேள்விகேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில்,

'இது போன்ற செயல்களுக்கு தமிழகத்தில் போதை கலாசாரம் அதிகமாகி விட்டதே காரணம். போதை கலாசாரத்தை கட்டுப்படுத்தினால் மட்டுமே பாலியல் குற்றங்கள் நடக்காமல் இருக்கும்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்