50 வயதுக்கு மேல் ஆகும்போது...- ரஜினிக்கு அமிதாப்பச்சன் கொடுத்த அட்வைஸ்

அமிதாப்பச்சன் தனக்கு கொடுத்த அட்வைசை ரஜினிகாந்த் பகிர்ந்துள்ளார்.;

Update: 2025-01-03 05:08 GMT

சென்னை,

அமிதாப்பசன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் இந்திய சினிமாவில் முண்னனி நடிகர்களாக வலம் வருகிறார்கள். இவர்கள் இருவரும் இணைந்து சமீபத்தில் வெளியான வேட்டையன் படத்தில் நடித்திருந்தனர். மேலும் இவர்களுடன் பகத்பாசில், ரித்திகா சிங், துசாரா விஜயன் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.

இந்நிலையில், அமிதாப்பச்சன் தனக்கு கொடுத்த அட்வைசை ரஜினிகாந்த் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

'அமிதாப்பச்சன் என்னிடம் 50 அல்லது அதற்கு மேல் வயதாகும்போது தம்மை பிஸியாக வைத்துக் கொள்ள வேண்டும். அது மிக முக்கியமானது என்று கூறுவார். மக்கள் என்ன சொல்வார்கள் என்பதைப் பற்றி கவலைப்படாமல் நான் என்ன செய்ய விரும்புகிறேனோ அதைச் செய்வதன் முக்கியத்துவத்தையும் அவர் அடிக்கடி என்னிடம் சொன்னார், நான் அதன்படியே வாழ்கிறேன்" என்றார்.

ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தைத்தொடர்ந்து, ஜெயிலர் 2 படத்திலும் நடிக்க உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்