"ராயன்" படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு

தனுஷ் நடிக்கும் "ராயன்" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.;

Update: 2024-07-04 09:14 GMT

சென்னை,

தனுஷ் நடிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான 'கேப்டன் மில்லர்' திரைப்படம் மக்களிடையே கலவையான வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தனுஷின் 50-வது படமாக உருவாகும் 'ராயன்' திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்தில் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் வடசென்னையை கதைக்களமாக கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகிறது. படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், புத்தாண்டை முன்னிட்டு வெளியான புதிய போஸ்டர் ஆகியவை நல்ல வரவேற்பைப் பெற்றன. தொடர்ந்து, படத்தின் முதல் பாடலான 'அடங்காத அசுரன்' வெளியாகி தனுஷின் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது.

இந்த படம் ஜூலை 26 -ம் தேதி வெளியாக இருக்கிறது. இதையொட்டி ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 6 ஆம் தேதி நடைபெறும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்