விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராய்

சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது.

Update: 2024-12-07 08:01 GMT

மும்பை,

1994-ம் ஆண்டு உலக அழகி என்ற பட்டத்தை பெற்றவர் ஐஸ்வர்யா ராய். இவர் தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராத்யா (13) என்ற மகள் இருக்கிறார்.

இதற்கிடையில் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவருக்கும் கருத்து வேறுபாடு நிலவி வருவதாகவும், விரைவில் இவர்கள் விவாகரத்து செய்து கொள்ள இருப்பதாகவும் பரவலாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்ச்சிக்கு கணவருடன் இல்லாமல் மகளுடன் தனியாக வந்தார் ஐஸ்வர்யா ராய். மேலும் ஐஸ்வர்யா ராயின் பிறந்தநாளுக்கு அபிஷேக் பச்சன் வாழ்த்து தெரிவிக்கவில்லை. இதையடுத்து விவாகரத்து உறுதி தான் என்று சர்ச்சையான பேச்சுகள் கிளம்பின.

இந்தநிலையில், மும்பையில் நடந்த பிரம்மாண்டமான விருந்து நிகழ்ச்சி ஒன்றில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் இணைந்து ஒன்றாக கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்த போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் இவர்களின் விவாகரத்து குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்