6 வருட காதல் - வருங்கால கணவரைப் பற்றி பகிர்ந்த மேகா ஆகாஸ்

தனது வருங்கால கணவரைப் பற்றி மேகா ஆகாஸ் பகிர்ந்திருக்கிறார்;

Update:2024-08-25 08:22 IST

சென்னை,

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் மேகா ஆகாஷ். அதனைத்தொடர்ந்து, தனுஷுடன் என்னை நோக்கி பாயும் தோட்டா, சிம்புவுக்கு ஜோடியாக வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தில் நடித்து பிரபலமானார்.

கடைசியாக இவரது நடிப்பில், சபாநாயகன், வடக்குப்பட்டி ராமசாமி, மழை பிடிக்காத மனிதன் உள்ளிட்ட படங்கள் வெளியாகின. கடந்த 22-ம் தேதி சாய் விஷ்ணு என்பவருடன் மேகா ஆகாஷுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது. இது தொடர்பான புகைப்படங்களை நடிகை மேகா பகிர்ந்து தனது ஆசை நிறைவேறியதாக இன்ஸ்டாகிராமில் நெகிழ்ச்சி பதிவை பகிர்ந்திருந்தார். அதனைத்தொடர்ந்து, ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்

இந்நிலையில், தனது வருங்கால கணவரைப் பற்றி மேகா ஆகாஸ் பகிர்ந்திருக்கிறார். அவர் கூறுகையில்,

'எனக்கு சாய் விஷ்ணுவை ஒன்பது ஆண்டுகளாக தெரியும், நாங்கள் ஆறு ஆண்டுகளாக காதலித்து வருகிறோம். பா. ரஞ்சித் இயக்கிய காலா மற்றும் கபாலி படங்களில் அவர் பணியாற்றி இருக்கிறார். பின்னர், சினிமாவிலிருந்து விலகிய அவர் தற்போது முழு நேர பிஸ்னஸில் ஈடுபட்டுள்ளார். ஆனாலும், திரைப்படம் இயக்குவது குறித்தும் யோசித்து வருகிறார். விஷ்ணுவுடனான எனது உறவு ரகசியம் அல்ல. அது அதிகாரபூர்வமாக மாறியதும் அதைப் பற்றி பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைத்தேன்,'என்றார்

Tags:    

மேலும் செய்திகள்