கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் புதிய படத்தின் டைட்டில் நாளை வெளியீடு
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் 16 வது திரைப்படத்தின் டைட்டில் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.;
சென்னை,
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், பீட்சா படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்களால் அறியப்படுபவர். அதைத் தொடர்ந்து இவர் ஜிகர்தண்டா, பேட்ட, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தற்போது இவரது இயக்கத்தில் 'ரெட்ரோ' எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்க பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படமானது மே 1-ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனராக மட்டுமில்லாமல் தனது ஸ்டோன்பென்ச் நிறுவனத்தின் மூலம் பல படங்களையும் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்து வருகிறார். அதன்படி, 'மெர்குரி', 'பென்குயின்' உள்ளிட்ட படங்களை கார்த்திக் சுப்புராஜ் தயாரித்திருந்தார். கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் தயாரிக்கும் 3 படங்களுக்கு கதாநாயகியாக நடிக்க சமூக வலைதள பிரபலம் நிஹாரிகா ஒப்பந்தமாகியுள்ளார்.
வைபவ் மற்றும் பிரியா பவானி ஷங்கர் இணைந்து நடித்த மேயாத மான் திரைப்படம் இவர் முதலில் தயாரித்த திரைப்படமாகும். ஸ்டோன் பென்ச் நிறுவனம் இதுவரை 15 திரைப்படம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது அவர்கள் தயாரிக்கும் 16- வது திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
16- வது படத்தின் டைட்டில் நாளை வெளியாகவுள்ளது. இப்படத்தில் வைபவ் மற்றும் அவரது சகோதரர் சுனில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இதில் அவர்கள் சவப்பெட்டியை தூக்கிக்கொண்டு நடனம் ஆடுவது போல் காட்சி அமைந்துள்ளது.