நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் அடையாளம் தெரியாத... ... வயநாடு நிலச்சரிவு; பலி எண்ணிக்கை 333 ஆக உயர்வு

நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் அடையாளம் தெரியாத உடல்கள் பொது மயானத்தில் அடக்கம்

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் அடையாளம் தெரியாதவர்களின் உடல்கள் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது மேப்படி கிராமத்தில் 74 அடையாளம் தெரியாத உடல்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும், தேவையான நடைமுறைகள் முடிந்த பிறகு உடல்கள் அடக்கம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல்களை அடக்கம் செய்வதற்கு கல்பெட்டா நகராட்சி, வைத்திரி, முட்டில், கணியம்பட்டா, பாடிஞ்சதாரா, தொண்டர்நாடு, எடவாகா, முள்ளங்கொல்லி ஆகிய கிராம பஞ்சாயத்துகளில் உள்ள மயானங்களில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உடல்களை முறையாக பதிவு செய்து, அடக்கம் செய்யும் பணிகளை மேற்பார்வையிடும் அதிகாரியாக பதிவுத்துறை ஆய்வாளர் ஸ்ரீதன்யா சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். 

Update: 2024-08-02 11:40 GMT

Linked news