உக்ரைன் மீதான ரஷிய போர் கடந்த பிப்ரவரி மாதம்... ... #லைவ் அப்டேட்ஸ்: போருக்கு மத்தியில் உக்ரைன் சென்ற 4 ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள்


உக்ரைன் மீதான ரஷிய போர் கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி தொடங்கியது. யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த போர் 5-வது மாதமாக தொடர்கிறது.

இந்தப்போரில் துறைமுக நகரமான மரியுபோல் உள்ளிட்ட நகரங்களை ரஷியா கைப்பற்றிவிட்டாலும், தலைநகரை கைப்பற்ற இயலாமல் போய்விட்டது. இப்போது ரஷியாவின் கவனம், கிழக்கு உக்ரைன்மீது படிந்துள்ளது. அங்குதான் சண்டை தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் உக்ரைனுக்கு ரஷியா கடந்த மார்ச் மாதம் 2-ந்தேதி முதல் இதுவரையில் 31 ஆயிரத்து 241 டன் மருந்துகள், உணவு பொருட்கள், மருத்துவ கருவிகள், சாதனங்களை வழங்கி உள்ளது. இந்த தகவலை ரஷிய தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர் மிக்கைல் மிஜின்ட்சேவ் தெரிவித்தார்.

Update: 2022-06-16 22:55 GMT

Linked news