விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: வெற்றியை தக்க வைத்தது தி.மு.க.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றியை தக்க வைத்துள்ளது.  அக்கட்சியை சேர்ந்த தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா 1,23,689 வாக்குகளை பெற்றுள்ளார். அவர் 67,446 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுள்ளார்.

இதேபோன்று, பா.ம.க. 56,243 வாக்குகளை பெற்றுள்ளது. பா.ம.க. வேட்பாளர் சி. அன்புமணி 2-வது இடம் பிடித்துள்ளார். அவர் டெபாசிட்டை தக்க வைத்து கொண்டார். நாம் தமிழர் கட்சி 10,832 வாக்குகளை பெற்றுள்ளது.

இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க.வினர் பட்டாசுகளை வெடித்து வெற்றியை கொண்டாடி வருகின்றனர். அக்கட்சி தொண்டர்கள் வெற்றி முழக்கங்களை எழுப்பியும், நடனம் ஆடியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Update: 2024-07-13 08:59 GMT

Linked news