விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி; தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா 67,446 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.;
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றியை தக்க வைத்துள்ளது. அக்கட்சியை சேர்ந்த தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா 1,23,689 வாக்குகளை பெற்றுள்ளார். அவர் 67,446 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுள்ளார்.
இதேபோன்று, பா.ம.க. 56,243 வாக்குகளை பெற்றுள்ளது. பா.ம.க. வேட்பாளர் சி. அன்புமணி 2-வது இடம் பிடித்துள்ளார். அவர் டெபாசிட்டை தக்க வைத்து கொண்டார். நாம் தமிழர் கட்சி 10,832 வாக்குகளை பெற்றுள்ளது.
இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க.வினர் பட்டாசுகளை வெடித்து வெற்றியை கொண்டாடி வருகின்றனர். அக்கட்சி தொண்டர்கள் வெற்றி முழக்கங்களை எழுப்பியும், நடனம் ஆடியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றியை தக்க வைத்துள்ளது.
விக்கிரவாண்டி தொகுதியில் தற்போதைய நிலவரம் ( பெற்ற வாக்குகள்)
திமுக: 44,680
பாமக: 17,359
நாம் தமிழர்: 3,936
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இதில் துவக்கம் முதலே திமுக முன்னிலை பெற்றுள்ளது. 6 சுற்றுகள் முடிந்த நிலையில், 24,810 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலையில் உள்ளது. திமுக தொடர்ந்து முன்னிலை பெற்று வருவதால் அக்கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விக்கிரவாண்டி தொகுதியில் பல்வேறு இடங்களில் பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகிறார்கள்.
விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கை மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே, அடுத்த சுற்றுக்கான வாக்கு இயந்திரங்கள் எடுத்து வரப்படுகின்றன. இதனால், வாக்கு எண்ணிக்கை மந்த கதியில் நடைபெற்று வருகிறது.