நாட்டையே உலுக்கிய வயநாடு நிலச்சரிவு..... ... வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 296 - ஆக உயர்வு- 3 வது நாளாக தொடரும் மீட்பு பணி

நாட்டையே உலுக்கிய வயநாடு நிலச்சரிவு.. செயற்கைக்கோள் புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. வயநாடு நிலச்சரிவுக்கு முன்.. பின்.. என புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.



 

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் 86,000 சதுர மீட்டர் பரப்பு நிலம் சரிந்து சேறாகி போன படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. கார்ட்டோசாட்-3 என்ற இஸ்ரோவின் தொலை உணர்வு செயற்கைக்கோள் மூலம் வயநாடு சேதங்கள் படம் பிடிக்கப்பட்டுள்ளன. முண்டகையில் தொடங்கி இருவைப்புழா ஆறு வரை சுமார் 8.கி.மீ தூரத்துக்கு நிலம் சரிந்து மழை, வெள்ளத்தோடு கலந்து ஓடிய தடத்தின் படமும் வெளியிடப்பட்டுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 1,550 மீட்டர் உயர்த்தில் நிலச்சரிவு ஏற்பட்டிருப்பதையும் துல்லியமாக எடுத்துகாட்டுகிறது இஸ்ரோ புகைப்படம்.

நிலச்சரிவு துல்லியமாக எந்த இடத்தில் தொடங்கி எதுவரை சென்றுள்ளது என்பதையும் இஸ்ரோவின் செயற்கைக்கோள் படம் தெளிவாக காட்டுகிறது. வயநாட்டில் ஏற்கனவே ஏற்பட்ட நிலச்சரிவு தொடர்பான செயற்கைக்கோள் புகைப்படத்தையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

Update: 2024-08-01 11:38 GMT

Linked news