பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் போது ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. விடைத்தாள் திருத்தும்போது செல்போன் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விடைத்தாள் திருத்தம் மையத்திற்குள் வெளி ஆட்கள் வருவதை அறவே தவிர்க்க வேண்டும் எனவும் உணவு உண்பதற்காக முகாமை விட்டு வீட்டுக்கோ, உணவகத்திற்கோ சென்று வருவது சிறந்த நடத்தையல்ல என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் காலதாமதமாக வருவது பணியின் இடையே அடிக்கடி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.