6 முதல் 12-ஆம் வகுப்பு வரை ஜூன் 12-ஆம் தேதி பள்ளிகள் திறப்பு - தமிழக அரசு அறிவிப்பு

Update: 2023-06-05 06:14 GMT

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பல மாவட்டங்களில் வெயில் நீடிப்பதால் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை ஜூன் 12-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும் ஒன்று முதல் 5-ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 14-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்