சென்னையில் அதிகாலை முதலே ஆயிரம் விளக்கு, ராயபுரம், நுங்கம்பாக்கம், வள்ளுவர்கோட்டம்,வில்லிவாக்கம்,பெரம்பூர், வியாசர்பாடி ஜீவா, சென்ட்ரல், எழும்பூர், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாயினர்.