நாடு முழுவதும் அமலுக்கு வந்தது குடியுரிமை திருத்தச்சட்டம்

நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Update: 2024-03-11 12:49 GMT

புதுடெல்லி,

அண்டை நாடுகளில் சிறுபான்மையாக உள்ள இந்துக்கள், சீக்கியர்கள் ஆகியோருக்கு குடியுரிமை அளிக்கும் 2019 திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றி இருந்தது. விரைவில் இது நாடு முழுவதும் அமலுக்கு கொண்டுவரப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்து இருந்தது.

இந்த அறிவிப்பின் மூலமாக அண்டை நாடுகளில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்டோர் இந்தியாவிற்கு வருகை தந்தால், ஐந்து வருடங்கள் அவங்கள் இங்கு தங்கியிருந்தாலே அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பிற்கு பாஜக ஆளும் மாநிலங்கள் வரவேற்பு தெரிவித்திருந்த நிலையில், பா.ஜ.க. அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் இந்த குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த முடியாது என தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் தேர்தலுக்கு முன்பாகவே இந்த சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி சிஏஏ சட்டம் அரசிதழில் வெளியானதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்