உ.பி: மருத்துவமனை தீ விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் உயர்வு
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தன.;
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டம் ஜான்சி லட்சுமிபாய் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் குழந்தைகள் வார்டில் கடந்த 15ம் தேதி அன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியது.சம்பவத்தன்று தீ விபத்தில் சிக்கி 10 குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தன. 39 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டன.
மேலும், தீக்காயம் ஏற்பட்ட சில குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன. சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.தீ விபத்தில் சிக்கிய மேலும் சில குழந்தைகள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்பட்டது. மேலும் சில குழந்தைகள் இறந்தன.
ந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் இரண்டு குழந்தைகள் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தன. இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை இதுவரை 17ஆக உயர்ந்துள்ளது.