10 ரூபாய்க்காக ஏற்பட்ட வாக்குவாதம்; ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது கண்டக்டர் தாக்குதல்

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி மற்றும் கண்டக்டர் இடையே நடந்த மோதல் தொடர்பான வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது.;

Update:2025-01-12 22:58 IST

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஆக்ரா சாலை வழியாக சென்ற பேருந்தில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.எல்.மீனா பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் கனோடா பேருந்து நிலையத்தில் இறங்குவதற்காக டிக்கெட் பெற்றிருந்தார்.

ஆனால் அவர் இறங்க வேண்டிய நிறுத்தத்தை தவறவிட்டதால், அடுத்த நிறுத்தமான நய்லா என்ற இடத்தில் ஆர்.எல்.மீனா இறங்க முயன்றுள்ளார். அப்போது ஆர்.எல்.மீனாவிடம் பேருந்தின் கண்டக்டர் கன்ஷ்யாம் சர்மா கூடுதலாக 10 ரூபாய் கேட்டுள்ளார். இதற்கு அவர் மறுத்த நிலையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அந்த வீடியோவில், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.எல்.மீனாவை கண்டக்டர் கன்ஷ்யாம் சர்மா சரமாரியாக தாக்கும் காட்சி பதிவாகியுள்ளது. இது குறித்து ஆர்.எல்.மீனா கனோடா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்