டிரம்ப் பதவியேற்பு விழா: வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்பு

டிரம்ப் பதவியேற்பு விழாவில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்கிறார்.;

Update:2025-01-13 03:56 IST

டெல்லி,

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற்றது. இதில், டொனால்டு டிரம்ப் வெற்றிபெற்றார். அவர் அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ளார். பதவியேற்பு விழா வரும் 20ம் தேதி நடைபெற உள்ளது.

இதனிடையே, பதவியேற்பு விழாவில் பங்கேற்க பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டொனால்டு டிரம்ப் பதவியேற்பு விழாவில் அர்ஜெண்டினா ஜனாதிபதி ஜாவிர் மிலினி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பங்கேற்பது உறுதியாகியுள்ளது. மேலும், பல்வேறு நாட்டு தலைவர்களும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில், டொனால்டு டிரம்ப் பதவியேற்பு விழாவில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்க உள்ளார். பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் ஜெய்சங்கர், டொனால்டு டிரம்ப்பின் மந்திரி சபையில் இடம்பெற உள்ள முக்கிய மந்திரிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்