பாஜக மாநிலங்களவை எம்.பி. ஹர்த்வார் தூபே (73) உடல்நலக்குறைவால் டெல்லியில் காலமானார். உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இவர், 2020ம் ஆண்டு முதல் மாநிலங்களவை எம்.பி-யாக பதவி வகித்து வந்துள்ளார். அவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.