துலாம் - வார பலன்கள்

Update:2023-06-09 01:24 IST

நம்பிக்கையோடு செயல்படும் துலா ராசி அன்பர்களே!

முயற்சியோடு செய்யும் சில காரியங்களில் நல்ல திருப்பங்களை எதிர்பார்க்கலாம். நண்பர்களின் ஒத்துழைப்பு தகுந்த சமயத்தில் கிடைத்து சில காரியங்களில் வெற்றி அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் முன்னேற்றமான மாற்றங்களைச் சந்திப்பார்கள். சிலருக்கு பதவியில் உயர்வு கிடைத்து பணியிட மாற்றம் வந்துசேரும். அலுவலகம் பற்றியோ, அதிகாரிகளைப் பற்றியோ, வீண் பேச்சில் ஈடுபடவேண்டாம்.

சொந்தத் தொழில் நன்றாக நடைபெறும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். கூட்டுத் தொழிலில் பணியாளர்களின் ஒத்துழைப்பினால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். போட்டிகளை சிறப்பாக எதிர்கொள்வீர்கள். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். கலைஞர்கள் புதிய வாய்ப்புகள் கிடைத்து வெளிநாடு பயணப்படுவர்.

பரிகாரம்:- இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு நெய் தீபமிட்டு ஏற்றிவைத்து வணங்குங்கள்.

மேலும் செய்திகள்