உறுதியுடன் காரியங்களில் ஈடுபடும் துலா ராசி அன்பர்களே!
எடுத்த காரியங்களில் தீவிர முயற்சியினால் வெற்றிபெறும் வாரம் இது. தடை, தாமதங்களைத் தவிடு பொடியாக்கி முன்னேறுவீர்கள். உத்தியோகஸ்தர்களில் சிலர், தங்கள் பொறுப்புகளை சரிவரச் செய்யாமல் அதிகாரியின் கோபத்திற்கு ஆளாவீர்கள். சொந்தத் தொழிலில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்காமல் போகலாம். வாடிக்கையாளர் ஒருவரால் அறிமுகப்படுத்தப்பட்ட நபரிடம் பண விஷயத்தில் மன வருத்தம் உண்டாகக்கூடும். கூட்டுத் தொழிலில் கூட்டாளிகளின் பேச்சும், செயலும் அதிருப்தியை அளிக்கலாம். ஆகவே வியாபார தலத்தை விரிவாக்கும் முயற்சியை தள்ளி வைக்கும்படி ஆகலாம். குடும்பத்தில் சிறுசிறு தொல்லைகள் ஏற்பட்டாலும், அவைகளை சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். கலைஞர்கள் புதிய வாய்ப்புகள் பெற்றாலும், வருமானம் எதிர்பார்க்கும் அளவு இருக்காது.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை விநாயகருக்கு அருகம்புல் மாலை சூட்டுங்கள்.