05.05.2024 முதல் 11.5.2024 வரை
இந்த வாரம் ஆதரவும் எதிர்ப்பும் கலந்திருக்கும் வாரத்தின் முற்பகுதியில் பணவரவுக்கு வாய்ப்புகள் உண்டு. புதிய முயற்சிகள் வேண்டாம். சிலருக்கு வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் எழக்கூடும். வெளியிடங்களில் அசுத்தமான ஆரோக்கியமற்ற சூழ்நிலைகளில் உள்ள உணவு பதார்த்தங்களை தவிர உங்கள் எதிர்பால் இனத்தவர்களால் பிரச்சனைகள் உருவாக வாய்ப்புகள் உண்டு கவனம் தேவை. உங்கள் வாகனங்களில் செல்லும்போது செல்லும்போதும் ஓட்டும்போதும் மிக கவனமுடன் இருப்பது நல்லது. இதில் விபத்துகளை முற்றிலும் தவிர்க்கலாம். மிக சுறுசுறுப்புடன் இயங்குவீர்கள். எதிரிகளை வெற்றி கொள்ளும் வாரம் இது. பெண்களுக்கு நினைத்த காரியத்தில் வெற்றி உண்டாகும்.