மற்றவர்களை எடை போடும்துலாம் ராசி அன்பர்களே!
பண வரவுகளில் தாமதங்கள் ஏற்படும். சகோதர வழியில் சிறு மனவேறுபாடு ஏற்படக்கூடும். தாயாரின் உடல் நிலையால் மருத்துவச் செலவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள், ஊழியர்களை அனுசரித்துச் செல்வது அவசியம். முக்கிய வேலை ஒன்றை உடனடியாக செய்ய வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். சகப் பணியாளர்களுடன் சுமுகமாக நடந்துகொள்ளுங்கள்.
சொந்தத் தொழில் செய்பவர்கள், தங்கள் பணிகளில் கவனமாக செயல்படுங்கள். உதவியாளரின் பணிகள் மகிழ்ச்சி தருவதாக இருக்காது. கூட்டுத் தொழிலில் உள்ளவர்கள், எந்த விஷயமாக இருந்தாலும் கூட்டாளிகளுடன் கலந்துபேசி முடிவெடுங்கள். குடும்பத்தில் சிறுசிறு தொல்லைகள் இருக்கும். புதிய கடன்களால், பழைய கடன்கள் தீரும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் பெற்றாலும், போதிய ஆதாயம் கிடைக்காது.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.