20-10-2023 முதல் 26-10-2023 வரை
காரியத்தை சிறப்பாகச் செய்யும் துலா ராசி அன்பர்களே!
செய்யும் காரியங்களில் வெற்றி பெற்றாலும், சிறுசிறு தொல்லைகளும் ஏற்படக்கூடும். திட்டமிட்ட பணவரவுகள் கைக்குக் கிடைக்கத் தாமதமாகும். எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் பணிகளில் கவனமாக இல்லாவிட்டால் உயரதிகாரிகளின் கோபப் பார்வைக்கு இலக்காகக்கூடும். சகப் பணியாளர்களின் பணியையும் சேர்த்து செய்ய வேண்டிய நிலை உருவாகும். சொந்தத்தொழிலில் வேலைப்பளு இருந்தாலும், பணிகளை விரைந்து கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். கூட்டுத் தொழிலில் வியாபாரம் சுமாராக நடந்தாலும், வழக்கமான லாபம் வந்து சேரும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளைப் பெண்களே சாமர்த்தியமாகச் சமாளித்து விடுவர். கலைத் துறையைச் சேர்ந்தவர்கள், புதிய வாய்ப்புகளைப் பெறுவர்.
சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் திங்கட்கிழமை சிவாலயத்திற்குச் சென்று வில்வ மாலை சூட்டுங்கள்.