மிடுக்கான தோற்றம் கொண்டதுலாம் ராசி அன்பர்களே!
உற்சாகத்துடன், அவசியமான செயல்களில் முயன்று வெற்றிகரமான பலன்களைப் பெறுவீர்கள். பணம் கொடுக்கல், வாங்கல்களிலும், காசோலைகளில் கையெழுத்து இடும் போதும் கூடுதல் கவனத்தோடு இல்லாவிட்டால் பிரச்சினைகளைச் சந்திக்க நேரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலருக்குப் புதிய பதவிகள் ஏற்படக்கூடும். சிலருக்கு அலுவலகம் மூலம் கிடைக்கவேண்டிய பணவரவு கைக்கு வந்து சேரும்.
சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்கள் மூலம் புதிய நபர்களின் அறிமுகமும், அவர்களால் அதிக வருமானமுள்ள வேலைகளும் கிடைக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபம் பெறக்கூடும். குடும்பத்தில் அமைதியான போக்கு காணப்பட்டாலும் சிறுசிறு பிரச்சினைகளும் இருக்கலாம். கலைஞர்கள், புதிய வாய்ப்பில் அதிக ஈடுபாட்டுடன் பணியாற்றுவர்.
பரிகாரம்:- இந்த வாரம் செவ்வாய்க்கிழமை துர்க்காதேவிக்கு செவ்வரளி மாலை சூட்டி வணங்கி வாருங்கள்.