முன்னேற்றமான செயல்களில் அதிக ஈடுபாடு காட்டும் துலா ராசி அன்பர்களே!
பல செயல்களில் முயற்சியோடு பாடுபட்டு, முன்னேற்றமான பலன்களை அடைவீர்கள். சில செயல்களுக்கு அதிக உழைப்பு தேவைப்படும். தனவரவுகள் குறிப்பிட்ட காலத்தில் கிடைத்தாலும், எதிர்பார்த்தவைகளை விட அதிக செலவு இருக்கும். பூர்வீக சொத்து பராமரிப்பில் நம்பத் தகுந்தவர்களை பணியமர்த்துதல் நல்லது. குலதெய்வ வழிபாடு செய்யுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அலுவலகத்தில் செல்வாக்கு அதிகமாகலாம். சொந்தத் தொழில் செய்பவர்கள் புதிய நபர்கள் மூலம் அதிக வேலைகள் பெற்று, அவைகளை விரைவாகச் செய்ய முற்படுவார் கள். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு வியாபாரத்தில் அதிக லாபம் ஏற்படும். குடும்பத்தில் சிறுசிறு தொல்லைகள் இருந்தாலும், பாதிப்புகள் வராது. கலைஞர்கள், புதிய ஒப்பந்தங்கள் பெற்று பணிகளில் ஆர்வமுடன் பணியாற்றுவர்.
பரிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சூட்டி வழிபாடு செய்யுங்கள்.