துலாம் - வார பலன்கள்

Update:2023-04-21 01:31 IST

உயர்வான எண்ணம் கொண்ட துலா ராசி அன்பர்களே!

சனிக்கிழமை காலை 6.18 மணி முதல் திங்கட்கிழமை பகல் 2.46 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், சில செயல்களில் மட்டுமே நீங்கள் எதிர்பார்க்கும் வெற்றியை பெற முடியும். பணவரவுகளைப் பெற அலைச்சலை மேற்கொள்ள வேண்டியதிருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, சகப் பணியாளர்களின் வேலையையும் சேர்த்து செய்யும் சூழல் உருவாகும். சொந்தத் தொழில் செய்பவர்களில் சிலருக்கு, பழைய வாடிக்கையாளர்கள் மூலம் புதிய நபர்களின் அறிமுகமும் வேலையும் கிடைக்கும். கூட்டு வியாபாரத்தில் லாபம் குறையலாம். போட்டிகளைச் சமாளிப்பது பற்றி பங்குதாரர்களோடு ஆலோசித்து முடிவெடுப்பீர்கள். குடும்பத்தின் பழைய கடன் தொல்லை தரலாம். கலைஞர்கள் தங்கள் பணிகளில் கவனமாக இல்லாமல் சிறு விபத்துக்களைச் சந்திக்க நேரிடும். பங்குச்சந்தையில் ஸ்திரமான பங்குகள் லாபம் தரும்.

பரிகாரம்:- இந்த வாரம் வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு, செந்தாமரை மலர் மாலை சூட்டி, நெய் தீபம் ஏற்றுங்கள்.

மேலும் செய்திகள்