துலாம் - வார பலன்கள்

Update:2023-04-07 01:36 IST

முன்னெச்சரிக்கையுடன் செயலாற்றும் துலாம் ராசி அன்பர்களே!

முயற்சிகளில் தீவிரமிருந்தாலும், எடுத்த காரியங்கள் சிலவற்றில் தான் முன்னேற்றமான பலன்கள் கிடைக்கும். நினைத்தது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கலாம். பொறுப்பில்லாமல் நடக்கும் குடும்ப உறுப்பினர்களின் செயல்களால் எரிச்சல் உண்டாகும். இருந்தாலும் வழக்கமான பொறுமையை கைவிடாதீர்கள். உத்தியோகத்தில் எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம். சகப் பணியாளர்களால் செய்ய முடியாத வேலையை முடித்து, உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். சொந்தத்தொழிலில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைத்து, தொழில் முன்னேற்றம் காணப்படும். கூட்டுத்தொழிலில் புதிய கிளைகள் தொடங்குவதற்கு இது ஏற்ற காலமில்லை. குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளை பெண்களே சமாளித்து விடுவார்கள். கலைஞர்கள், புதிய வாய்ப்புகளைப் பெற தீவிரம் காட்டுவர்.

பரிகாரம்:- இந்த வாரம் சனிக்கிழமை, சனீஸ்வர பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றிவைத்து வழிபாடு செய்யுங்கள்.

மேலும் செய்திகள்