துலாம் - வார பலன்கள்

Update:2023-03-24 01:25 IST

முன்னேற்றத்துக்காக பாடுபடும் துலா ராசி அன்பர்களே!

ஞாயிறு முதல் செவ்வாய் காலை 7.28 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், எதிலும் நிதானம் அவசியம். உத்தியோகஸ்தர்கள் இடமாற்றம், பதவி உயர்வு போன்ற நன்மைகளை எதிர்பார்க்கலாம். கலைஞர்கள் நேரடியாக முயற்சி செய்வதன் மூலம் சில புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். அதன் மூலம் ஒரு சிலர் நல்ல பொருளாதார வளர்ச்சியும் பெறுவர். அதே நேரம் வேலை நிமித்தமாக வெளிநாடு செல்வதாக இருந்தால், கொஞ்சம் யோசித்து முடிவு செய்வது நல்லது.

சொந்தத் தொழில் செய்பவர்கள், பெரும்பாலும் நற்பலன்களையே எதிர்பார்க்கலாம். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு, இதுவரை இருந்து வந்த பிரச்சினைகள் படிப்படியாக விலகும். குடும்ப நிர்வாகத்தில் பெண்களின் சிறப்பான திறமை வெளிப்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

பரிகாரம்:- இந்த வாரம் செவ்வாய்க்கிழமை துர்க்கை அம்மனுக்கு செவ்வரளி மாலை சூட்டி, நெய் தீபம் ஏற்றுங்கள்.

மேலும் செய்திகள்