அறிவாற்றலும், எழுத்தாற்றலும் நிறைந்த துலா ராசி அன்பர்களே!
செய்தொழிலில் கவனம் தேவை. முடிவான விஷயம் ஒன்று, கடைசி நேரத்தில் கை நழுவிப் போக வாய்ப்புண்டு. உத்தியோகஸ்தர்கள் இடமாற்றம், பதவி உயர்வு போன்றவற்றைப் பெற, இப்போது அவசரப்பட வேண்டாம். சிறிது காலம் பொறுமையாய் இருந்தால் நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். தொழில் செய்பவர்கள், தங்கள் துறையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். கூட்டுத்தொழில் செய்பவர்கள், ஓரளவு திருப்தி காண்பார்கள். தொழிலை விரிவுபடுத்துவது பற்றி கூட்டாளிகளோடு கலந்து ஆலோசித்து முடிவெடுங்கள். கலைஞர்களுக்கு மிகப் பெரும் புகழைத் தரக்கூடிய வகையில் பிரபல நிறுவனங்களில் இருந்து வாய்ப்புகள் தேடி வரலாம். குடும்பத்தில் கணவன் - மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். மூன்றாம் நபரை குடும்ப பிரச்சினையில் தலையிட அனுமதிக்காமல் இருப்பது நல்லது.
பரிகாரம்:- இந்த வாரம் செவ்வாய்க்கிழமை, முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்து வணங்கி வாருங்கள்.