துலாம் - வார பலன்கள்

Update:2023-03-03 01:36 IST

வார ராசி பலன்கள் 3.3.2023 முதல் 9.3.2023 வரை

சொந்த நலனை எதிர்பார்க்காத துலா ராசி அன்பர்களே!

தடைபட்ட காரியங்களை முயற்சியுடன் செய்து முடிப்பீர்கள். புதிய நண்பர்களின் மூலம் வளர்ச்சிக்கு அடித்தளமிடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் சிலருக்கு, அலுவலகத்தில் வைத்த கோரிக்கைக்கு உயரதிகாரிகளின் ஒப்புதல் கிடைக்கக்கூடும்.

சொந்தத்தொழிலில் ஆதாயம் சுமாராகவே இருக்கும். பழைய வாடிக்கையாளர்கள் மூலம் நல்ல திருப்பத்தைச் சந்திக்க நேரலாம். கூட்டுத்தொழிலில் கூட்டாளிகளின் தலையீடு ஏற்படக்கூடும் அதனால் நிர்வாகத்தில் அசவுகரியம் வரலாம். பங்குச்சந்தையில் லாபம் பெற நாட்டு நடப்புகளை கவனிப்பது அவசியமாகும்.

கலைஞர்கள் பணியில் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். எதிர்பாராத திருப்பங்கள் வரலாம். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் அவ்வப்போது ஏற்படக்கூடும். சிறிய கடன் தொல்லைகள் தலைகாட்டும். இல்லத்தில் சுபகாரியம் நடத்த திட்டமிடுவீர்கள். பெண்களுக்கு எதிர்பாராத தன வரவு தேடி வரக்கூடும்.

பரிகாரம்:- வியாழக்கிழமை குரு பகவானுக்கு நெய் விளக்கேற்றி வழிபட்டால் துன்பங்கள் விலகும்.

மேலும் செய்திகள்