துலாம் - வார பலன்கள்

Update:2023-02-24 01:25 IST

கற்பனை வளம் நிறைந்த துலா ராசி அன்பர்களே!

ஞாயிறு மதியம் 3.21 மணி முதல் செவ்வாய் வரை சந்திராஷ்டமம் உள்ளதால், பயணங்களை தள்ளிப்போடுங்கள். காரியங்கள் தாமதமானாலும், சுய முயற்சியால் அதில் முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள், தங்களின் பொறுப்புகளில் கவனமாக இருப்பதால், உயர் அதிகாரியின் மனதில் உயர்ந்து நிற்பீர்கள். அலுவலகத்தில் இருந்து சில சலுகைகளும் கிடைக்கலாம். சொந்தத் தொழில் செய்பவர்கள், ஒரு சிறிய தவறினால் மீண்டும் அந்த வேலையைச் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். புதிய வாடிக்கையாளரால் தொழிலில் திருப்பம் உண்டாகும். கூட்டுத் தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கக்கூடும். கடன் தொல்லை இருந்தாலும், குடும்பம் பாதிப்பின்றி நடைபெறும். கலைஞர்கள் புதிய வாய்ப்பினால் களிப்படைவார்கள். பங்குச்சந்தையில் நண்பர்களின் உதவியால் லாபம் உயரும்.

பரிகாரம்:- புதன்கிழமை அன்று சக்கரத்தாழ்வாருக்கு, துளசி மாலை அணிவித்து வணங்கி வாருங்கள்.

மேலும் செய்திகள்