கவலைகளை வெளிப்படுத்தாத துலா ராசி அன்பர்களே!
உங்கள் பிள்ளைகளின் ஆரோக்கியம், கல்வி போன்றவற்றில் இருந்து வந்த கவலை நீங்கும். பல நாட்களாக எதிர்பார்த்திருந்த காரியம் தற்போது கைகூடும். நல்ல வரன் அமைந்து திருமணம் முடிவாகலாம். உங்கள் குடும்பத்திற்குச் சொந்தமான நிலத்தை நீங்கள் மீண்டும் அடைவீர்கள். சகோதரர், உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.
இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பூமி சம்பந்தப்பட்ட வியாபாரம் செய்பவர்களும், நெருப்பு சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களும் ஏற்றம் அடைவார்கள். தர்மஸ்தாபனம், பள்ளிக்கூடம் நடத்துபவர்கள் பாராட்டு மழையில் நனைவார்கள். அரசியலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சாதகமான நேரம் இது. காவல் துறையினருக்கும், பணம் புழங்கும் துறையில் இருப்பவர்களுக்கும் சோதனையான காலகட்டம் இது. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம்.
பரிகாரம்:- இந்த வாரம் புதன்கிழமை, பெருமாள் கோவிலுக்குச் சென்று சக்கரத்தாழ்வரை வழிபட்டு வாருங்கள்.