துலாம் - வார பலன்கள்

Update:2023-02-03 01:17 IST

திறமையாக பணியாற்றும் துலா ராசி அன்பர்களே!

சில காரியங்களில், எதிர்பார்த்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்காது. பிரச்சினைகள் தோன்றினாலும் அவை சுமுகமாக முடியும். உத்தியோகத்தில், தேங்கிக் கிடந்த வேலைகளை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். ஒரு சிலருக்கு, முதலில் செய்த வேலையில் ஏற்பட்ட குறைகளை சரி செய்ய வேண்டிய நிலை உண்டாகும்.

சொந்தத்தொழில் செய்பவர்களுக்கு, புதிய வாடிக்கையாளர் மூலமாக தொழில் ரீதியான முன்னேற்றம் ஏற்படும். கூட்டுத்தொழில் வியாபாரம் செய்பவர்கள், பணியாளர்களை அடிக்கடி கண்காணிப்பது நல்லது. தொழிலை விரிவுபடுத்துவது பற்றி ஆலோசிப்பீர்கள். பங்குச்சந்தையில் வழக்கமான லாபம் குறையாது.

கலைஞர்கள், தரகர்களை நம்பாமல், நேரடியாக வாய்ப்புகளைப் பெற முயற்சி மேற்கொள்வார்கள். குடும்பத்தில் அவ்வப்போது சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு மறையும். கடனை தொல்லையை சமாளிப்பீர்கள்.

வழிபாடு:- செவ்வாய்க்கிழமை அன்று அங்காரகனுக்கு, நெய் தீபமிட்டு வழிபட்டால் அருளும், பொருளும் கிடைக்கும்.

மேலும் செய்திகள்