துலாம் - வார பலன்கள்

Update: 2023-01-26 19:51 GMT

கனிவான பேச்சால் கவர்ந்திழுக்கும் துலா ராசி அன்பர்களே!

திங்கள் காலை 7.46 மணி முதல் புதன் மாலை 4.58 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், சில காரியங்களில் தளர்வுகள் ஏற்படக்கூடும். எதிர்பார்த்த பண வரவு தாமதமாகலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலருக்கு பொறுப்புகள் அதிகமாகும். சக நண்பர்களின் சொந்த விஷயங்களில் தலையிடாதீர்கள்.

சொந்தத் தொழில் செய்பவர்கள், வேலைகளில் புதிய கவனம் செலுத்துவது அவசியமாகும். தொழில்நுட்பம் அறிந்த உதவியாளர்களை பணியில் அமர்த்திக் கொள்ள திட்டமிடுவீர்கள். கூட்டு வியாபாரம் செய்பவர்கள் பணியாளர்களை அவ்வப்போது கண்காணிப்பது நல்லது. குடும்பத்தில் சீரான போக்கு இருக்கும். நெருங்கிய உறவினர் வருகையால் செலவு கூடலாம். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களினால் புகழும், பொருளும் பெறக்கூடும். பங்குச்சந்தை வியாபாரம் அதிக லாபம் ஈட்டித்தரும்.

பரிகாரம்:- வியாழக்கிழமை அன்று தட்சிணாமூர்த்திக்கு, கொண்டைக்கடலை படைத்து வழிபட்டால் துன்பம் அகலும்.

மேலும் செய்திகள்