துலாம் - வார பலன்கள்

Update:2023-01-13 01:25 IST

எதையும் குறையின்றி செய்யும் துலா ராசி அன்பர்களே!

முயற்சிகளோடு செய்யும் பல செயல்களில் முன்னேற்றமான பலன்களைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு இருக்கும். தள்ளிவைத்த வேலையை உடனே செய்ய வேண்டிய அவசியம் ஏற்படலாம். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர் மூலம், தொழில் ரீதியான நன்மைகள் உண்டாகும். சரியான காலத்தில், தயாரான பொருட்களை கொடுத்துப் பாராட்டுப் பெறுவீர்கள். கூட்டுத் தொழில் செய்பவர்கள், வியாபாரத்தில் அதிக லாபம் அடைவார்கள். பங்குதாரர்களிடம் கணக்குகளை சரிபார்த்து அவர்களது பங்குக்குரியதை வழங்குவீர்கள். குடும்பத்தில் சிறிய கடன் தொல்லைகள் அகலும். பண வசதிகள் அதிகமாகலாம். கலைஞர்கள், பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தங்களில் உள்ள பணிகளில் ஆர்வத்துடன் செயல்படுவர். பங்குச்சந்தை வியாபாரம் லாபத்தோடு நடைபெறும்.

பரிகாரம்:- தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமை, வில்வ மாலை சூட்டி வழிபட்டால் இன்பமான வாழ்வமையும்.

மேலும் செய்திகள்