செயல்களில் அதிக ஊக்கம் கொண்ட துலா ராசி அன்பர்களே!
உங்களுக்கு எதிர்பாராத தன வரவுகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. தந்தை வழி சொத்துக்களை அடைவதற்கான வழிபிறக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும். தெய்வீக பிரார்த்தனைகளை இந்த வாரம் நிறைவேற்றுவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த ஏதோ ஒரு விஷயத்தில் வெற்றியைப் பெறுவீர்கள். கண் சம்பந்தமான பிரச்சினைகள் தோன்றி மறையலாம். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுடன் சிறு மனக்கசப்பு உண்டாகலாம். அரசாங்க வழக்குகளில் உங்களுக்கு சாதகமாக திருப்பம் ஏற்படும். அரசியல்வாதிகளும், அரசு ஊழியர்களும் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். எதிர்பாராத சோதனைகள் தேடி வரலாம். ஆனால் விபரீதமாக எதுவும் நடந்துவிடாது. குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன்- மனைவி இடையே கருத்து ஒற்றுமை உண்டாகும்.
பரிகாரம்: புதன்கிழமை அன்று திருமாலையும், கருட பகவானையும் வழிபாடு செய்து வந்தால், சோதனை அகலும்.