துலாம் - வார பலன்கள்

Update:2022-10-21 01:27 IST

சித்திரை 3, 4-ம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ம் பாதங்கள்

நீதி நேர்மையில் நம்பிக்கை கொண்ட துலா ராசி அன்பர்களே!

உத்தியோகத்தில் உள்ளவர்கள் உயரதிகாரியின் உத்தரவுப்படி, வெளியூர் சென்று அவசர வேலையில் ஈடுபட நேரலாம். எதிர்பார்ப்புகள் தள்ளிப்போகலாம். சொந்தத் தொழிலில் சிறப்பான முன்னேற்றம் காணப்படும். கையில் உள்ள பணிகளைச் செய்ய முடியாத நிலையில், புதிய வேலைகள் அவசரப்படுத்தலாம். கூட்டுத்தொழிலில் பணப்புழக்கம் அதிகரிக்கும். பங்குச்சந்தையில் அன்றாட நிலவரத்தைக் கவனித்து செயல்படுவது லாபத்தைப் பெருக்கும். கலைஞர்கள் வெளியூர் பயணங்களிலும், கடினமான பணிகளிலும் சுவனமாக இருப்பது நல்லது. ஆகார விஷயங்களில் அக்கறை காட்டுங்கள். குடும்பத்தில் அமைதி இருந்தாலும், சிறு சிறு பிரச்சினைகள் ஏற்படத்தான் செய்யும். சுப காரியங்களில் தடை, தாமதங்கள் உருவாகக்கூடும். ஆலய தரிசனங்கள் செய்ய வெளியூர் செல்லத் திட்டமிடுவீர்கள்.

பரிகாரம்: துர்க்கா தேவிக்கு வெள்ளிக்கிழமை அன்று நல்லெண்ணெய் தீபமிட்டு வழிபட்டால் துன்பம் விலகும்.

மேலும் செய்திகள்