துலாம் - வார பலன்கள்

Update:2022-10-14 01:54 IST

வெள்ளி மற்றும் சனி பகல் 11.35 வரை சந்திராஷ்டமம் உள்ளதால் எதிலும் கவனம் தேவை. சகோதர வழியில் சிறுசிறு சலப்புகள் தோன்றி மறையும். மருத்துவச் செலவு செய்ய நேரலாம். உத்தியோகஸ்தர்களில் சிலருக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைத்து வேறு இடத்திற்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும். சொந்தத்தொழில் செய்பவர் அதிக வேலைகளையும், அதிக வருமானத்தையும் பெறக்கூடும். கூட்டுத்தொழிலில் கவனமுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். உறவினர்களும், நண்பர்களும் தக்க சமயத்தில் உதவுவர். குடும்பத்தில் திருமண முயற்சிகள் கைகூடும். கலைஞர்கள் புதிய வாய்ப்பினைப் பெற்று வெளியூர் செல்லும் வாய்ப்புண்டு. பங்குச்சந்தையில் லாபம் அதிகரிக்கும். இந்த வாரம் இல்லத்தில் தீபமேற்றி முருகப்பெருமானை வழிபாடு செய்வது பலன்களை அளிக்கும்.

மேலும் செய்திகள்