நீண்ட காலமாக நினைத்திருந்த காரியம் நிறைவேறும். பொருளாதார நிலை உயரும். உத்தியோகஸ்தர்களில் சிலருக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். தொழிலில் புதியமுறைகளை புகுத்துவதற்கான வழிகளை காண்பீர்கள். பெண்களின் சாமர்த்தியமான நடவடிக்கைகளால் குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். இந்த வாரம் வெள்ளிக்கிழமை, துர்க்கை அம்மனுக்கு செவ்வரளி மாலை சூட்டி வணங்கி வாருங்கள்.