துலாம் - வார பலன்கள்

Update:2023-08-11 01:22 IST

உழைப்பையே ஆதாரமாகக் கொண்ட துலா ராசி அன்பர்களே!

வெள்ளிக்கிழமை சந்திராஷ்டமம் உள்ளதால் எதிலும் கவனம் தேவை. செலவுகள் எதிர்பார்ப்பையும் மீறி இருக்கும். சகோதர வழியில் சிறுசிறு சலசலப்புகள் தோன்றி மறையும். உத்தியோகஸ்தர்களில் சிலர் விடுமுறையில் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். சிலருக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைத்து, வேறு இடத்திற்குச் செல்லும் வாய்ப்பு உண்டு. சொந்தத்தொழில் செய்பவர் அதிக வேலைகளையும், அதிக வருமானத்தையும் பெறக்கூடும். கூட்டுத்தொழிலில் கவனமுடன் இருந்தால் வருமானம் அதிகரிக்கும். விலைவாசி உயர்வும், பொருட்களின் பற்றாக்குறையும் உங்கள் பிரச்சினைக்கு காரணமாக அமையும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும், பெரிய பாதிப்புகள் இருக்காது. கலைஞர்கள் புதிய வாய்ப்புகளைப் பெற்று, வெளியூர் பயணம் செய்வர். பங்குச்சந்தை லாபம் அதிகரிக்கும்.

சிறப்புப் பரிகாரம்:- இந்த வாரம் செவ்வாய்க்கிழமை முருகனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள்.

மேலும் செய்திகள்